அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.
இந்நிலையில், “அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான். சசிகலா டிடிவியை கட்சியில் இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்,” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெரம்பூரில் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா தொண்டர் படையுடன் வரவில்லை; குண்டர்கள் படையுடன் வந்தார்.
தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது கொம்பு சீவி விட்டு, அதற்காக முதலைக் கண்ணீர் வடிப்பதைப் போன்றதாகும் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.