120
எப்பொழுதும் வேலை முடிந்ததும் சீக்கிரமாக வந்து மகளுடன் நேரத்தைக் கழிக்கும் செழியன் சிறிது நாட்களாக கார்குழலி உடன் நேரத்தை செலவிட்டான்.
வீட்டிற்கு தாமதமாக செல்ல ஆரம்பித்தான்.
தேவியுடனும் பேசுவது குறைகிறது.
செழியனிடம் சென்று தேவி பேசுகிறாள்.
“நான் உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டும். ஏன் எப்பொழுதெல்லாம் தாமதமாக வருகிறீர்கள்???
வந்தாலும் என்னிடம் நீங்கள் அவ்வளவாக பேசுவது இல்லை??? எதனால் இந்த மாற்றம்???
என் மீது ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள். அதை நான் மாற்றிக் கொள்கிறேன்.”
செழியனின் குற்ற உணர்வு அதிக வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகின்றான்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அலுவலகத்தில் சிறிது வேலைப்பளு அதிகமாக இருக்கிறது அதனால் தான்.”
“இதை நீங்கள் முன்னதாகவே சொல்லியிருக்கலாம். நான் ஏதோ தவறு செய்துவிட்டேன்.
அதற்காகத்தான் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது தெளிவாகி விட்டேன். உங்களுக்கு நாளை காலை என்ன சமைக்க வேண்டும்??? “
“நானே உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன். அலுவலகப் பணியின் காரணமாக அடுத்த வாரம் வெளியூருக்கு செல்ல இருக்கிறேன். நான் திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.”
“என்னது ஒரு வாரமா??? “
“உங்கள் மகள் ரத்தினா உறங்கும்போது உங்களுடன்தான் உறங்குவாள். நான் அவளை எப்படி சமாளிப்பது.
எனக்கும் சிரமமாகத்தான் இருக்கிறது.”
“என்ன செய்வது அலுவலகப் பணி முடியாது என்று சொல்ல முடியாது அதனால் ஒரு வாரம் மட்டும் பார்த்துக்கொள். நான் சீக்கிரமாகவே வர பார்க்கிறேன்.”
வழக்கம்போல அலுவலகப் பணிக்கு கிளம்பும் செழியன் கார்குழலிடம் இன்று எப்படியாவது முடிவை தெரிந்து கொள்ள வேண்டுமென யோசிக்கிறான்.
அதனால் அவளிடம் பேச அலுவலக வாசலிலேயே காத்திருக்கிறான்.
கார்குழலி வர அவளிடம் “நான் உன்னிடம் பேசினேன் . அதற்கு எந்த பதிலும் வரவில்லை இன்று என்னிடம் உன் முடிவை சொல்லிவிடு.”
சிறிது நேரம் மௌனமாய் இருக்கும் கார்குழலி “சரியா என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் எனது வாழ்க்கை என்று நான் யோசிக்கும் போது இது சரியே அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்.”
“சரி உன்னுடைய முடிவுக்காக தான் காத்திருந்தேன் இப்போது கிடைத்துவிட்டது. அடுத்த வாரம் வீட்டில் அலுவலகப் பணிக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்று உன் வீட்டில் சொல்லி விடு. நான் திருமணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடுகிறேன். வெளியூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துவிட்டு வந்துவிடலாம். அதனால் வீட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் எப்பொழுதும் போல நடந்து கொள். இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் இப்பொழுதே உன் வீட்டில் சொல்லி விடு தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்.’
“சரி நான் அதை பார்த்துக் கொள்கிறேன். இப்பொழுது நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன்.”
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
Nice