சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 18

150views
பட்டியலிட்டபடி பொருட்கள் வாங்கப்படுகிறது.
பத்திரிக்கை அடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வைக்கப்படுகிறது.
தேதி குறித்த நாளில் திருமணமும் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு பெரிய வேலையை முடித்துவிட்டதாக அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி.
அனைவரும் வீட்டில் ஓய்வு எடுக்க அப்போது தேவியின் வளைகாப்பு பற்றி பேசத் தொடங்குகிறாள் கவிதா.
ஒன்பது மாதம் தொடங்கப் போகிறது நல்ல நாள் குறித்து அவள் வீட்டாரிடம் சொல்லுங்கள்.
வளைகாப்பில் அவளுக்கு ஏதாவது நகை போட சொல்லுங்கள் என்று லக்ஷ்மிக்கு சொல்லிக் கொடுக்கிறாள்.
லக்ஷ்மியும் தனது மகள் சொன்னபடி தேவியின் தாய், தந்தையை நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அதனால் வீட்டுக்கு வாங்க என்று சொல்லி முடிக்கிறாள்.
என்னவாக இருக்கும் என்று புரியாமல் இருவரும் அன்றே லட்சுமி பார்க்க வந்தனர்.
வந்தவர்களை வாங்க என்று மாமியார் தோரணையில் பேச ஆரம்பிக்கிறாள்.
“என்னம்மா ஏதோ பேசணும்னு சொன்னியே. இருங்க அதை பத்தி தான் பேசணும். என்ன வளர்த்து இருக்கீங்க உங்க மகள?”
“ஏன் என்ன ஆச்சு!!! எப்பொழுதும் முகத்தை உம்மென்று வைத்து இருக்கிறாள்.”
“உங்கள் மகளுக்கு சிரிக்க தெரியாதா??? இல்லை ஒருவேளை என் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லையா??? எப்பொழுதும் முகம்கொடுத்து சரியாக பேசுவதில்லை…”
“அப்படி எல்லாம் இருக்காது லட்சுமி. அவள் நன்றாகத்தான் பேசுவாள்.
யாராவது அவள் மனம் புண் பட பேசினால் அவள் மறு வார்த்தை பேசாமல் அமைதியாக இருப்பாள்.
மற்றபடி அவளுக்கு யாரையும் பிடிக்காமல் இருக்காது.”
அவளின் மீது அடுக்கடுக்கான புகார்கள் சொல்கிறாள்.
இதைக்கேட்ட தேவியின் பெற்றோர் சரிமா இனிமேல் எதுவும் இதுபோல் நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்.
“என்னமோ போங்க”
எல்லாம் சரியான போதும் என்று சொல்லி முடித்ததும்.
“முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஒன்பதாம் மாதம் தொடங்க ஆரம்பிக்கிறது. அதனால் அவளுக்கு வளைகாப்பு நடத்தி விடலாம் என்று யோசிக்கிறோம்.”
“சரிமா அது நல்லதுதானே நாங்களும் எங்கள் முறைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். என்று சொல்லி முடிப்பதற்குள்,
“நீங்கள் வளைகாப்புக்கு அவளுக்கு நகைகள் ஏதாவது சேர்த்து போடுங்கள்” என்று சொல்ல,
“நாங்கள்தான் திருமணத்திற்கு போட்டு விட்டோம் . மறுபடி குழந்தை பிறந்தால் போடுவோம்.”
“அது என்ன வளைகாப்புக்கு இது புது சம்பிரதாயமாக இருக்கிறதே” என்று ketkka
தேவியின் பெற்றோருக்கு அப்படி நகை போடவில்லையே என்றால் உங்கள் மகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் வளைகாப்பு முடிந்ததும் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டோம்.
எங்கள் மகள் அவளுக்கு என்ன செய்யவேண்டும்.
என எனக்கு தெரியும் நீ சொல்லாதம்மா என்று சொன்ன தேவியின் தந்தையை சாந்தி கைபிடித்து ஒன்றும் பேசாதீர்கள் என்று மறைமுகமாக சொல்கிறாள்.
சாந்தி உடனே பேச ஆரம்பிக்கிறாள் நான் என்ன வேண்டுமோ அதை நகையோடு சேர்த்து செய்கிறோம்.
இது நல்லபடியாக நடக்கட்டும்.
அதனால் நாங்கள் இப்போது கிளம்புகிறோம்.
சரி போயிட்டு வாங்க என சொல்லி வந்தவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் செல்கிறாள் லக்ஷ்மி.
நடந்த விஷயம் எதுவும் தெரியாத
தேவியும், செழியனும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வருகின்றனர்.
உள்ளே வந்த இருவரிடமும் லக்ஷ்மி தேவிக்கு வளைகாப்பு இந்த மாதம் வைத்து விட்டதாகவும் அதை தேவியின் பெற்றோரிடம் சொன்னதாகவும் சொல்கிறாள்.
இப்பொழுதுதான் உனது பெற்றோர் வந்து செல்கின்றனர்.
அவர்களிடம் சொல்லி விட்டேன் அவர்களும் அன்றே வளைகாப்பு வைத்துக்கொள்ளலாம் சொல்லி சென்றனர்.
பெற்றோர் நம்மைப் பார்க்காமல் சென்று சென்று விட்டதை நினைத்து வருந்துகிறாள்.
செழியன் தேவியிடம் கடைக்கு சென்று வளைகாப்புக்கு உனக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று கூப்பிட ……
இதைக் கேட்ட லட்சுமி.
“அடேய் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை”
அதை அவர்கள் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள் நீ எடுத்து தர வேண்டிய அவசியமில்லை என்று சொன்னதும் அவனும் மறுவார்த்தை பேசாமல் அமைதியாய் சென்றுவிடுகிறான்.
இதை பார்த்த தேவி மௌனமாய் இருக்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!