ஒரே நாளில் தவறவிட்ட முதலிடத்தை சிஎஸ்கேவிடம் இருந்து தட்டி பறித்த ஆர்சிபி ! புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் !
ஒரே நாளில் தவறவிட்ட முதலிடத்தை சிஎஸ்கேவிடம் இருந்து தட்டி பறித்த ஆர்சிபி ! புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் !
நேற்று(ஏப்.22) நடைபெற்ற 16வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி மைதானத்தின் நிலைமையை அறிந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பவர்ளே முடிவில் 32 ரன்களை குவித்து 3 விக்கெட்களை இழந்தது பஞ்சாப் அணி. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 8, மனன் வோஹ்ரா 7, டேவிட் மில்லர் 0 என பவர்ளேவில் விக்கெட் இழந்தனர்.
இதன்பிறகு களமிறங்கிய சஞ்சு சாம்சன் 21, சிவம் டூபே 46 ரன்கள், ரியான் பராக் 25 ரன்கள், ராகுல் திவாட்டியா 40 ரன்கள், மோரிஸ் 10 ரன்கள் என இவர்கள் அதிரிடியாக விளையாடி வந்ததால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் குவித்தனர்.
ஆர்சிபி பவுலர்கள் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் பந்தை மைதானத்தின் நாலா புறமும் அடித்தனர். இதன்மூலம் பவர்பிளேவில் 59 ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக விளையாடி வந்த இவர்கள் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க இவர்களது பார்ட்னர்ஷிப்பை பிரிக்க ராஜஸ்தான் பவுலர்கள் திணறி வந்தனர். இறுதியாக படிக்கல் தனது சதத்தை (101) பூர்த்திய செய்ய, விராட் கோலி 72 ரன்கள் குவிக்க ஆர்சிபி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம், பெங்களூர் அணி தற்போது 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் மற்றும் +1.009 நெட் ரன் ரேட் பெற்று முதலில் உள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6 (+1.142) புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும்,
டெல்லி கேப்பிடல்ஸ் 6 (+0.426) புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆர்சியிடம் இருந்து முதல் இடத்தை பிடித்தது. ஆனால் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆர்சிபி மீண்டும் முதல் இடத்தை பிடித்துக்கொண்டது.