சினிமா

ஒரு முடிவின் தொடக்கமாக உருவான ‘வார்டு 126’

60views

ஓடிடி தளங்­களில் படத்தை வெளி­யிட வரி­சை­யில் காத்­தி­ருக்க வேண்டி­யுள்­ளது என்­கி­றார் ‘வார்டு 126’ படத்­தின் இயக்­கு­நர் செல்­வ­கு­மார் செல்­ல­பாண்­டி­யன்.

இதில் மைக்­கேல் தங்­க­துரை, விஷ்ணு மேனன் ஆகி­யோர் நாய­கர்­க­ளாக நடிக்க, ஷ்ரிதா சிவ­தாஸ், சாந்­தினி தமி­ழ­ர­சன், வித்யா பிர­தீப், ஷ்ருதி ராம­கி­ருஷ்ணா என நான்கு நாய­கி­கள் உள்­ள­னர்.

தனி­ம­னித ஒழுக்­கத்தை வலி­யு­றுத்­தும் பட­மாக இது உரு­வாகி உள்­ளது. மேலும், காதல், புல­னாய்வு, திகில் உள்­ளிட்ட மற்ற அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. சோனியா அகர்­வால், ஸ்ரீமன் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

“ஒவ்­வொரு துறை­யி­லும் சில இருண்ட பக்­கங்­கள் இருக்­கவே செய்­யும். நான் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­யாற்­றி­ய­போது சில இருண்ட பக்­கங்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றேன். என் கண்­முன்னே நிகழ்ந்த சில சம்பவங்களின் தொகுப்­பாக இப்­ப­டத்­தின் கதை அமைந்­தி­ருக்­கும்.

‘வார்டு-126’ என்ற தலைப்­பில் உரு­வாகி உள்ள இந்­தப் படம் ஒரு முடி­வின் தொடக்­க­மாக இருக்­கும். கொரோனா நெருக்­க­டியை சமா­ளித்து படத்தை முடித்­தோம்,” என்­கி­றார் இயக்­கு­நர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!