தமிழகத்தில் ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் தற்போது மிக முக்கியமான கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உருவாக்கப்படும் ஆக்ஸிஜன் 25 டன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றும், பாலக்காட்டில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்னும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சனிக்கிழமையன்று போதுமான அளவில் ஆக்ஸிஜன் வழங்க முடியாது என்று தமிழகத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மத்திய அரசு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் தமிழக அரசின் ஆக்ஸிஜன் தேவை அளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இது வெள்ளிக்கிழமைக்குள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் சனிக்கிழமையில் இருப்புக்கள் வழங்கப்படுவதைப் பற்றி அதிகாரிகள் பேசும் அவசரநிலை நடக்காது. ஆக்ஸிஜனின் தேவைக்காக உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க மிக உயர்ந்த அலுவலகங்களின் கவனம் தேவை. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் பிரிவு அடுத்த வாரம் வரை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய வாய்ப்பில்லை ‘என்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, சுகாதாரத் துறை அதிகாரிகள் மே 2 ஆம் தேதி அன்று ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு, மத்திய அரசு பிரதிநிதிகள், உற்பத்தியாளர்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது என்றும் நாள் ஒன்றுக்கு 475 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இது வரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் புகார் கூறினர். மே 5 ம் தேதி ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர், ஆனால் அதில் தமிழகம் இடம்பெறவில்லை. ஒரு நாளைக்கு சுமார் 450 மெட்ரிக் டன் தேவைக்கு மாறாக, மத்திய ஒதுக்கீடு கடந்த வாரம் முதல் 280 மெட்ரிக் டன்னாக அறிவித்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை மிகக் குறுகிய காலத்தில் மலிவு விளையில் பொருத்தி தருகின்றன. மாநில அரசுகளிலும் மத்திய அரசும் இது போன்ற ஆலைகளை உருவாக்க வேண்டும். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற பெரிய நகரங்களில் இந்த அமைப்பை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மாநிலத்தில் ரெம்டெசிவிர் கிடைப்பது தொடர்பாக பேசியிஅ போது, வெள்ளிக்கிழமை அன்று பொறுப்பேற்க உள்ள திமுக அரசின் சார்பில், தனியார் மருத்துவமனைகள் அல்லது நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகளை வெளியிடுவதற்காக மதுரை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் மையங்கள் அமைக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து கேட்டதற்கு மாறாக 1.35 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் மருந்துகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
95% படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையிலும் தமிழகம் இதை சிறப்பாக கையாண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 70% படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மையான படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லை. ஆனால் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாம் அலை உருவாவதற்கு முன்பு நோய் தொற்றினை கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். விசாரணை மே 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.