உலகம்

ஒரு டிக்கெட் விலை ரூ.3.38 கோடி!!

43views

பிரிட்டன் தொழிலதிபர் வர்ஜின் காலாக்டிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன், தனியார் விண்வெளி பயணத்தை தொடங்க இருக்கிறார்.

அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3.38 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பணமாக ரூ.1.12 கோடியை செலுத்த வேண்டும். மீதித் தொகையை இந்த ஆண்டு இறுதியில் பயணம் மேற்கொள்ளும்போது தரவேண்டும்.

இப்போதைக்கு ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்க வர்ஜின் காலாக்டிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம், நடுத்தர ராக்கெட் – கம் – விமானம் மூலம் பிரான்சன் உள்ளிட்ட சிலரை அண்மையில் ‘விண்வெளியின் விளிம்பு வரை’ அழைத்துச் சென்று பத்திரமாக திரும்பியது.

இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம், தனது ராக்கெட் சேவை பாதுகாப்பானது என்று உலகிற்கு நிரூபித்தார் பிரான்சன். இது அசல் விண்வெளிப் பயணமல்ல என்றாலும், பயணிகளுக்கு விண்வெளி வீரர்களுக்குரிய பயிற்சி சில நாட்களுக்கு வழங்கப்படும். அசல் விண்வெளி உடையும் தரப்படும்.

அடுத்த ஆண்டுக்குள், விண்வெளியிலிருந்து பூமி உருண்டையைப் பார்த்த சிவிலியன்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிடும் என வர்ஜின் காலாக்டிக் நம்புகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!