விளையாட்டு

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

90views

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.  இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்தது.  தொடக்க ஆட்ட வீராங்கனையான சுசீ பேட்ஸ் (5) ரன் அவுட் முறையில் வெளியேறினார்.  மற்றொரு வீராங்கனையான சோபி (35 ரன்கள்), கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  எனினும், அமெலியா கெர் மற்றும் எமி சாட்டர்வெய்ட் அரை சதம் விளாசினர்.  அவர்கள் முறையே 50 மற்றும் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கிரீன் (27), கேத்தி (41), ஹெய்லி (1), லீ தகுகு (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளனர்.  ஜெஸ் கெர் ரன் எதுவும் எடுக்கவில்லை.  மெக்கே (13), ஹன்னா (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களை எடுத்திருந்தது.  இந்தியாவுக்கு 261 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகள் யாஸ்திகா (28) ஸ்மிரிதி மந்தனா (6) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தீப்தி, எல்.பி.டபிள்யூ முறையிலும் (5), மிதாலி ராஜ் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் (31) ஆட்டமிழந்து உள்ளனர்.  எனினும், ஹர்மன்பிரீத் கவுர் 71 (63 பந்துகள் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அரை சதம் விளாசினார்.  ரிச்சா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.  ஸ்னேஹ் ராணா (18), பூஜா (6), ஜுலன் கோஸ்வாமி (15), ராஜேஷ்வரி (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இந்திய அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் எடுத்து உள்ளது.  இதனால், நியூசிலாந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!