விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கலக்கும் கோலி – ரவிசாஸ்திரியால் ஓரங்கட்டப்பட்ட வீரர்

78views

இந்த ஐபிஎல் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே முத்தாய்பாக ஜொலிக்கிறார் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்.

ஆனால், அவருக்கான வாய்ப்பு விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி இருந்தபோது போதுமான அளவில் கிடைக்கவில்லை.

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபிஎல் 2022 -ல் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் உமேஷ் யாதவ் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை தனதாக்கிக் கொண்டுள்ளார். 145 கி.மீ வேகத்தில் அவர் வீசும் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இந்த ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்தபோது, ​​டி20 மற்றும் ஒருநாள் அணியில் உமேஷ் யாதவ் முற்றிலும் நீக்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட, உமேஷ் யாதவுக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் 2022-ல், உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளார். ரவிசாஸ்திரி இருந்தவரை உமேஷ் யாதவ்வின் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக இருந்தது. அவருக்கு பதிலாக சிராஜ், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அதிக வாய்ப்புகளை பெற்றனர். ரோகித் சர்மாவின் பார்வை விழுந்தால், இவருக்கான இந்திய அணி வாய்ப்பு என்பது வெகு தூரத்தில் இல்லை.

உமேஷ் யாதவ் 2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் விளையாடினார். இதுவரை 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள உமேஷ் யாதவ் 33.63 சராசரியுடன் 106 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் 24.33 சராசரியுடன் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உமேஷ் யாதவ் 52 டெஸ்ட் போட்டிகளில் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

140-145 கி.மீ என்ற வேகத்தில் தொடர்ந்து பந்துவீசும்போது உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் சிறப்பாக வீசக்கூடியவர். இவருக்கான வாய்ப்பை ரோகித் வழங்கினால் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் எதிரணியினரை கலங்கடிப்பார். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது ஐபிஎல் போட்டி முடிந்த பிறகே தெரிய வரும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!