கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்துகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி மூலம் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 4ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.