60
ஐபிஎல் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஞாயிறு அன்று துவங்கவுள்ளது . இதில் கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ள அணிகலுக்கு இடையிலான போட்டி இரண்டாம் பாதியில் வலுப்பெருமென எதிர்பார்க்கபடுகிறது .
ஐபிஎல் இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று .சராசரியாக 30கோடி இந்தியர்கள் வருடாவருடம் ஐபிஎல் பார்பதாக கூறப்படுகிறது .இந்தியர்களின் இந்த விருப்பமான திருவிழா கடந்த ஆண்டு 2020ல் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு தாமதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது .14வது சீசன் இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது அதன் பாதியில் வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் நிறுத்திவைக்கபட்டது .
கொரோனா அலைக்கு பின்பு நடத்தபடும் போட்டிகள் அனைத்தும் மிக தீவர கட்டபாடுகளுடன் மற்றும் பாதுகாப்புடனே நடைபெற்று வருகிறது .இதனிடையே இதையும் மீறி மே மாதத்தில் நடந்த ஐபிஎல்லில் கொரோனா பரவியதால் வேறுவிழியின்றி பாதியில் நிறுத்தபட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதி போட்டிகள் நடக்கவுள்ளது .
ஐபிஎல்லின் ஜாம்பவான் அணி என்று அழைக்கப்படும் மும்பை அணி ஐபிஎல்லின் சிங்கங்கள் என்று அழைக்கப்படும் சென்னை அணியோடு செப்டம்பர் 19ம் தேதி பலபரிட்டசை நடத்தவுள்ளது .இவ்விரு அணியும் ஆடிய இதற்கு முந்தைய போட்டியில் நான்கு விட்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
தல தோனியின் தலைமையிலான சென்னை அணி இந்த வருட ஐபிஎல்லை சிறப்பாகவே எதிர்கொண்டு வருகிறது .புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் மும்பையை எதிர்கொள்கிறது .
போன போட்டியின் போது செய்த தவறுகளை போல் இந்த முறை எந்த தவறும் செய்யாமல் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தும் என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் .அதே நேரத்தில் புள்ளி பட்டியலில் சிறிது பின்தங்கியுள்ளதால் மும்பை அணிக்கு இந்த வெற்றி மிக அவசியமானது இதனால் இவ்விரு அணிகலுக்குள் நடக்கும் முதல் போட்டியிலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது .
புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி அணி இருக்கிறது சென்னை அணி இரண்டாம் இடத்திலும் பெங்களூர் அணி மூன்றாம் இடத்திலும் நான்காம் இடத்தில் மும்பை அணியும் இருக்கிறது.அடுத்த நான்கு இடத்தில் ராஜஸ்தான்,பஞ்சாப்,கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இருக்கின்றனர் .
முதல் நான்கு இடங்களை தக்கவைக்கும் அணிகளுக்கே பிளே ஃஆப் வாய்ப்பு இருப்பதால் முதல் நான்கு இடங்களை தக்க வைக்கவும், முதல் நான்கு இடங்களில் இல்லாத அணிகள் இரண்டாம் பாதியை சரியாக பயன்படுத்தி மேல் வந்து வெற்றி கொடியை பிடிக்க இரண்டாம் பாதி உதவும் என்பதாலும் ,இரண்டாம் பாதி ஐபிஎல்லில் ஒவ்வொரு போட்டியும் “வாழ்வா சாவா” போட்டி தான் .
-
கே.எஸ்.விஷ்ணுகுமார்