8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கேரளா அணியினர் ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் கேரளா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் போடவில்லை.
இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்றது.
கேரளா அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி, 5 டிரா என மொத்தம் 17 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.