இந்தியா

ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

60views

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

மோடி வியாழக்கிழமை மாலை பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்திற்குச் சென்றார். நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் மோடி பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது. பெண்களின் சக்தி கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

மார்ச் 10 முதல் ஹோலி தொடங்கும் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம். பாஜகவின் இந்த வெற்றியை உறுதி செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கோவாவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க உள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் கட்சி தனது செயல்திறனுடன் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் பல பிரதமர்களை வழங்கியுள்ளது, ஆனால் முதல் முறையாக யோகி ஆதித்யநாத் முழு பதவிக்காலத்திற்குப் பிறகு மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கும் அதே வேளையில், சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி வழங்கப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு ஏழையிடமும் நாம் அவர்களின் பலன்களைச் சேர்ப்போம். உ.பி-யில் 2014 முதல் மாநில மக்கள் மீண்டும் மீண்டும் வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

மணிப்பூர், உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கோவா மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

2019-ல் மத்தியில் நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது, அது உ.பி-யில் 2017-ல் பெற்ற வெற்றியால் சாத்தியப்பட்டதாக நிபுணர்கள் சொன்னார்கள்… 2022 தேர்தல் முடிவுகள் 2024 தேசியத் தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று அதே நிபுணர்கள் கூறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!