இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெப் சீரியசாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், டாடி, வேம்புலி ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் பசுபதி சமீபத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆரியாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்களும், வரவேற்பும் மக்கள் மத்தியில் கிடைத்தது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனது பெயரில் இருக்கும் கணக்குகள் அனைத்தும் போலியானவை. நான் என்று நம்பி என்னுடைய ரசிகர்கள் பின் தொடர வேண்டாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.