கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டி.ஜே.ஆப்ரஹாம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்தார். அதில், ”பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதற் காக ஒப்பந்தம் கோரியதில் ஊழல் நடந்துள்ளது. எனவே எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி தேவை” என கோரினார். இதை ஏற்க மறுத்த ஆளுநர், எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க மறுத்தார்.
இதையடுத்து டி.ஜே.ஆப்ரஹாம் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, உறவினர்கள் விருப்பாக்ஷா மரடி, சசிதர் மரடி, சஞ்சய், கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ”கொல்கத்தாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக எடியூரப்பா குடும்பத்தினருக்கு ரூ. 50 கோடிக்கும் அதிகமாக கமிஷன் கொடுக் கப்பட்டுள்ளது.
அதே போல பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதற்காக ஒப்பந்தம் கோரியதிலும் ஊழல் நடந் துள்ளது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் மூலமாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, உறவினர்கள் சசிதர் மரடி, சஞ்சய் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கில் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே நீதி மன்றம் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்”என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த பெங் களூரு சிறப்பு நீதிமன்றம், ”எடியூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. லோக் அயுக்தா நீதிமன்றமும் இந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டது. போதிய ஆதாரங்களும், குற்றச்சாட்டுக் கான முகாந்திரமும் இல்லாததால் எடியூரப்பா, விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது”என உத்தரவிட்டது.