உலகம்

‘எங்க ஸ்டைலில் விரட்டுவோம்’ 30 லட்சம் தடுப்பூசியை நிராகரித்தார் கிம் ஜாங்

68views

அதிரடி முடிவுகளுக்கும், சர்ச்சையான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில், வடகொரியாவில் மட்டும் யாருக்குமே தொற்று இல்லை என குண்டை தூக்கி போட்டு ஆச்சரியமூட்டியவர். இதுவரை வடகொரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டதா இல்லையா என்பதே மர்மமாக உள்ளது.

தற்போது, எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பூசி போதாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் தனது நாட்டிற்கு கிடைத்த 30 லட்சம் தடுப்பூசியை புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழைநாடுகளுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் ஐநா அமைப்பு, கோவேக்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சீன நிறுவனத்தின் 30 லட்சம் தடுப்பூசிகளை, வடகொரியா ஏற்க மறுத்துள்ளது. ‘கொரோனாவை எங்க ஸ்டைலில் விரட்ட எங்களால் முடியும். தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பூசிகளை தந்துவிடுங்கள்’ என கிம் ஜாங் உன் கூறி உள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!