உலக சாம்பியன்சிப் கிக்பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிற்காக தேர்வாகி உள்ளார் பாலி சதீஷ்வர்
366
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற ஹீரோ சர்வதேச தொழில்முறை எம்.எம்.ஏ ( மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட் ) ( உலக மிகவும் ஆபத்தான விளையாட்டுகளில் முதலாவதாக திகழும் ) போட்டியில் தமிழ் நாட்டின் முதல் முறையாக கலந்து கொண்ட திரு.பாலீ சதீஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தன்னை இரண்டு மடங்கு அதிகமான எடை பிரவு கொண்ட குஜராத்தை சேர்ந்த தொழில்முறை வீரர் திரு. வினித் தெசாயய் முதல் சுற்றில் 3 நிமிடம் 15 விநாடிகளில் நாக் அவுட் முறையில் வீழ்த்தி வராலாற்று வெற்றி பெற்றார். அவரின் வெற்றிக்கு அவருடைய மல்யுத்த பயிற்சியாளர் திரு.ராம்பர்வேஸ் ( சர்வதேச மல்யுத்த வீரர் ) மற்றும் அவரின் நண்பர் யு.எப்.சி வீரர் திரு.பரத்கந்தாரே உறுதுணையாக இருந்தனர்.
எம்.எம்.ஏ உலகின் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டில் முதன்மையாக விளங்குகிறது எம்.எம்.ஏ எனப்படும் மிக்ஸ்ட் மார்ஸியல், ஆர்ட் விளையாட்டில் உலகின் ஆபத்தான கலைகளான பாக்ஸிங், மோய்தாய், கிக்பாக்ஸிங், ஜீடோ, ஜூஜீட்சு, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் முக்கிய அங்கமாக உள்ளன. இந்த உயிருக்கு ஆபத்தான உண்மையாக வீரத்தை வெளிப்படுத்தும் போட்டியில் தமிழகத்தின் முதல் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் பாலி சதீஷ்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 21 ஆண்டுகளாக தற்க்காப்பு கலை பயிற்சி செய்துவரும் பாலீ சதீஷ்வர் பாக்ஸிங், கிக்பாக்ஸிங், ஜீடோ, மோய்தாய் போன்ற தனி விளையாட்டுகளிலும் இதுவரை மாநில,தேசிய, சர்வதேச அளவில் பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்று உள்ளார். உலகத்தில் உள்ள அனைத்துனாட்டு மக்களாளும் பார்க்க படும் எம்.எம்.ஏ போட்டியான யு.எப்.சி
அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஸிப்பில் போட்டியில் இந்தியாவின் முதல் வீராக உள்ள நாசிகை சேர்ந்த பரத் கந்தாரேவுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் பாலி சதீஷ்வர் மேலும் தொழில் முறை எம்.எம்.ஏ போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் யு.எப்.சி ல் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்க்கும் உலக அரங்கில் பெருமை சேர்ப்பதே தனது லட்சியமாக கொண்டு கடினமான சவால்களை எதிர் கொண்டு வருகிறார். தொடர்ந்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் தொழில் முறை குத்து சண்டை போட்டியிலும மற்றும் இந்தியாவின் மாபெரும் அளவில் நடைபெறவிறுக்கும் சர்வதேச தொழில்முறை மிக்ஸ்ட் மார்ஸியல் ஆர்ட் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் .
*வரும் அக்டோபர் மாதம் எகிப்தில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்சிப் கிக்பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிற்காக தேர்வாகி உள்ள பாலி சதீஷ்வர் உலக சாம்பியன் ஆவதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இவரது வெற்றிக்கு அவருடைய குத்து சண்டை பயிற்ச்சியாளர் திரு. சரவணன் மற்றும் பயிற்சி கூட்டாளிகள் தேசிய குத்து சண்டை வீரர் குருசங்கர், முகமது ஜக்காரியா, மூத்த ஜீடோ பயிற்சியாளர் திரு. சி.எஸ். ராஜகோபால் மற்றும் இவரது பெற்றோர் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.