நிகழ்வு

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம்

125views
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி, World Moral Day (World Humanitarian Drive, UK) சார்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

World Humanitarian Drive, UK அமைப்பின் Founder and Chairman Dr. அப்துல் பாசித் சையத் அவர்களுக்கு தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் அவர்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

 

உலக மனிதர்களிடத்தில் அன்பு,அமைதி, ஒற்றுமை நிலைக்கவும், மனித நேயம் தழைக்கவும் சக மனிதர்களுக்கு உதவிடவும் பிற உயிரினங்களின் மீது அன்பு செலுத்திடவும் இயற்கையை பாதுகாக்கவும் இந்த நன்னாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தேசிய கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக்குறிச்சி உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கில் சவூதி அரேபியா சார்பில் திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் இணையவழியாகக் கலந்து கொண்டு “ மனிதகுலச் சேவை” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
இந்த வலைதள பக்கத்தில் நீங்கள் சென்று காணலாம்.
https://www.youtube.com/watch?v=0sjmxYLwN84
தகவல்:
  • கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், சமூக ஆர்வலர், துபாய்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!