255
உறவுகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான ஒரு காரணி என்பது நாம் அனைவரும் அறிந்ததே .
நாளடைவில் ,வாழ்க்கையின் ஓட்டத்தில் உறவின் முக்கியத்துவம் குறைந்து ,வசதி, அந்தஸ்து, புகழ் இவற்றை தேடி நிம்மதி ,மகிழ்ச்சி ஓய்வு, கூடவே உறவின் மதிப்பையும் மறந்து கொண்டிருக்கிறோம்.இது ஒரு கவலை தரும் விஷயம் மட்டுமல்ல.பல எதிர் வினைகளை தரும் ஒன்றும் கூட.
என்ன மாதிரி விளைவுகள் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்!
முதலில் உறவுகளில் ஏற்படும் ஒரு சில முக்கிய குறைபாடுகளை பார்த்து விடுவோம் .
1.பரஸ்பர புரிதல் இல்லாமை
2.அன்பை வெளிபடுத்த தவறுதல்.
3. உறவுகளுக்காக நேரம் செலவழிக்க தவறுதல்.
3.பரஸ்பர குற்றசாட்டு.
4.அடிப்படை புரிதல் இல்லாமை.
5.உறவுகளுக்குள் உண்மை தன்மை இல்லாமை.
6.கடைசியாக மிக முக்கிய குறை என்னவென்றால் உறவுகளுக்குள் தேவையான புரிதலுடன் கூடிய அவரவர்களுக்கான
நேரத்தை ,உரிமையை,சுதந்திரத்தை, விருப்பங்களை சந்தித்துகொள்ள விட்டு கொடுக்காமல் விடுவது.ஆங்கிலத்தில் இதை SPACE என்பார்கள்.
தீர்வுகள் பற்றிய ஒரு அலசல்:
*எந்த வித உறவானாலும் புரிதல் இருந்துவிட்டால் பல வித கருத்து வேறுபாடுகளை தவிர்க்கபட்டுவிடும்..
.உறவுகளுக்குள் தேவையற்ற வாக்குவாதம் ,கோபம் , பேச்சு துண்டிப்பு.மன அழுத்தம்,மனகுறை,,சுய பரிதாபம் ,இதெல்லாம் ஏற்பட புரிதல் இல்லாமை மிக முக்கிய காரணம் ஆகிறது.
*.அடுத்ததாக, ,அன்பை வெளிபடுத்தும் பண்பு.இது பெரும்பாலும் அதிகம் பேரிடம் இல்லாததும் உறவுகள் ,குறிப்பாக திருமண பந்தம் உடைய காரணமாகிவிடுகிறது.எனவே மிக எளிய செயலான இந்த அன்பை வெளிபடுத்துதலை நாம் செய்யாமல் விடுவதற்கும் நம் வேகமான வாழ்க்கை முறையே காரணம்.
*நம்மை சுற்றியுள்ள உறவுகளுக்காக நேரம் செலவழிக்கமல் வருமானம் ஈட்டுவதிலேயே பெரும்பாலான நேரம் போய்விடுவதும் உறவுகளுக்குள் மனவேற்றுமை வர இன்னொரு காரணம்.
*அதேபோல வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்க்கும் வழியை விட்டு விட்டு அதற்கு யார் காரணம் என்ற வாக்குவாதம் தொடங்கிவிடும்..இதுவும் வீட்டில் கசப்புணர்வு ஏற்பட வழிசெய்து விடுகிறது.
*பல வீடுகளில் அனாவசியமாக சண்டை சச்சரவு அதிகம் இல்லாமல் வாழ்க்கை ஒரு சீராக செல்லும்.இதற்க்கு அவர்களுக்குள் இருக்கும் அடிப்படை புரிதல் தான் காரணம்.
*உறவுகள் பலப்பட தம்பதிகளாகட்டும் பிள்ளைகளுடன் ஆகட்டும் அவர்களிடையே உண்மைதன்மை நேர்மை மிக முக்கியம்.
இப்போது SPACE கொடுப்பதில் உள்ள பலன்கள்:
பெண்கள், கணவருக்கோ .பிள்ளைகளுக்கோ அவர்களுக்கான சுதந்திரத்தை அவ்வபோது அதிகம் கேள்வி, சந்தேகம் சண்டை, விசாரிப்பு, இவையெல்லாம் இல்லாமல் விட்டு கொடுத்து போவது நலம்.ஆண்களும் இதை கடைபிடிக்கலாம்.
சரி !இனி உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் ஏற்படும் மன நல பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1.மன அழுத்தம்.
2.தீவிர கசப்புணர்வு.
3.வீட்டில் விரும்பதகாத சூழல்.
இவற்றில் அதிகம் கவனிக்க வேண்டியது மன அழுத்தம்.
இதற்கு சிறந்த உதாரணம் இன்று பெருகி வரும் விவாகரத்து கலாச்சாரம்.
ஆம்! தம்பதிகள் எளிதாக விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள்
தங்கள் பிள்ளைகளை பற்றிய கவலை சிறிதும் இல்லாமல்.
தங்களுடைய இந்த பிரிவினால். பிள்ளைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள் என்ற பேராபத்து புரியாமல் மிக வேகமாக முடிவு பண்ணி பிரிந்து விடுகின்றனர் .எனவே பெற்றோர் விவாகரத்து என்ற முடிவை எடுக்கும் முன் பிள்ளைகளைப் பற்றிய கட்டாயம் சந்திக்க வேண்டும். சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது இதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள நேர்ந்தது .என் சகோதரி அங்கே மனநல மருத்துவமனையில் பணி புரிவதால் அங்கு வரும் பெரும்பாலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரின் பிரிவினால் இந்த நிலைக்கு வந்தவர்கள் .இதே தவறு நம் நாட்டிலும் அதிகமாகி வருவது மிக கவலை தரும் விஷயம். காரணம் இந்த பிரிவினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பலவித மன நெருக்கடிக்கு ஆளாகி மன உளைச்சல், பசியின்மை, தூக்கமின்மை, பயம், தனிமை, குழப்பம், கவலை கடைசியாக வெறுமை உணர்வு தரும் பயத்தினால், பாதுகாப்பின்மையால், தற்கொலை அளவுக்குக்கூட யோசிப்பது மிக ஆபத்தான ஒரு மனநிலை. இந்த Separation Anxiety Disorder SAD என்னும் மன நோய் வராமல் பிள்ளைகளை பாதுகாப்பது, “பெற்றோர்கள் கடைபிடிக்கும் ஒற்றுமை* மட்டுமே. தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் தங்கள் பிள்ளைகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என்று ஒரு நிமிடம் பெற்றோர் யோசித்தாலும் போதுமானது.
விவாகரத்தின் காரணமாக பிரிந்து வாழும் போது ஆண் பெண் இருபாலரும் மனதளவில் பாதிக்கப் படுவது உறுதி. அந்த மன அழுத்தம் ஏதாவது ஒரு கட்டத்தில் வெளிப்பட்டு அவர்களது மன நிம்மதி கெடும் நிலையும் ஏற்படுகிறது.
அடுத்ததாக உறவுகளுக்குள் ஏற்படும் விரிசலினால் பருவ வயதினர் முதற்கொண்டு் பெரியவர்கள் வரை ஏற்கனவே கூறியுள்ள மன உளைச்சல் எனும் மனநோயினால் அதிக பாதிப்பு அடையும் நிலை ஏற்படுகிறது. severe Depression
என்ற இந்த கட்டமும் ஆபத்தானது. மேற்கண்ட அறிகுறிகள் கூடவே இந்த நிலையிலும் தற்கொலை எண்ணம் அதிகம் வரும். அதற்கான முயற்சிகளில்(suicidal attempts) ஈடுபடுவது நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இறுதியாக வயதானவர்கள் ஒதுக்கப்படும் நிலை அதைப் பற்றி இங்கே கூறியாக வேண்டும் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் நலிவடைந்த நிலையில் பிள்ளைகளால், சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் போது அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பின் சதவீதமும் அதிகம் ஆகிறது.
எனவே கடைசியாக கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் கூடுமான வரை உறவுகளை புரிந்து கொண்டு சுமுகமான உறவை கடைபிடிப்பது் அவசியமாகிறது .இந்த Interpersonal Relationship இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் மிக அவசியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
நன்றி வாழ்த்துக்கள்!
- நளினி சந்திரசேகரன்.
மனநல ஆலோசகர்