இந்தியா

உபி.,யில் 3ம் கட்ட தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு துவங்கியது

49views

உ.பி.,யில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல்இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

உ.பி., யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம்தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 14-ம் தேதியும் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 60.17 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.இந்நிலையில் 3-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி வாக்காளர்கள் ஓட்டுகளை பதிவு செய்ய உள்ளனர். மூன்றாவது கட்ட தெர்தலுக்காக சமஜ்வாதி, ஆம்ஆத்மி மற்றுமு பா.ஜ தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் போட்டியிடுகிறார். இதன்காரணமாக இந்த தொகுதி மீது அனைவரின் கவனமும் திரும்பி யுள்ளது.பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது, இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது, 117 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதில் போட்டியிடும், 1,304 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை, 2.13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.ஓட்டுப் பதிவு காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடக்க உள்ளது.காங்., ஆம் ஆத்மி, அகாலி தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணி, பா.ஜ.,- பஞ்சாப் லோக் காங்., – சுக்தேவ் சிங் தின்ட்சா தலைமையிலான அகாலி தளம் கூட்டணி மற்றும் விவசாய சங்கங்களின் சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகியவை இத்தேர்தலில் மோதுகின்றன.பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையிலான ஆளும் காங்., கட்சி ஆட்சியை தக்க வைக்குமா, இல்லையா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!