உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
பஞ்சாபில் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நாட்டை வழிநடத்திய பிரதமர்களில், இப்போதைய பிரதமர் மோடி மக்கள் செல்வாக்கு மிகுந்த பிரதமராக உருவெடுத்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி யில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் செல்வாக்கை கண்கூடாக பார்க்க முடிந்தது. சாதி, வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும். யாருடனும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இருக் காது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளார். ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறார். மாபியாக்களிடம் இருந்து மாநிலத்தை மீட்டுள்ளார். இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெறும்.
உத்தராகண்டில் பாஜக அரசு 5 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி யுள்ளது. எங்களது ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. உத்தராகண்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலர் உள்ளனர். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தால் அவர்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே உத்தராகண்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
மணிப்பூரில் பாஜக ஆட்சியில் வன்முறை, போதை பொருள் கடத்தல் ஒழிக்கப் பட்டுள்ளது. இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டி ருக்கிறது. ஏராளமான மருத் துவ கல்வி நிறுவனங்கள் தொடங் கப்பட்டுள்ளன. மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.
கோவா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்று கூறப்படுகிறது. அது தவறு. அந்த மாநிலத்திலும் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங் களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். பஞ்சாபில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.
இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.