உலகம்

உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது: ரஷ்யா

56views

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடனும், ரஷ்ய ராணுவத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறிய ரோமன் பாபுஷ்கின், உக்ரைன் இந்திய மாணவர்களை துன்புறுத்துவதாக சாட்டியதுடன், உக்ரைனில் உள்ள ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றார்.

தூதர் ரோமன் பாபுஷ்கின், Zee மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்திய மாணவியின் மரணம் மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்திய மாணவர் எந்த சூழ்நிலையில் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்களை குறிவைக்கவில்லை, அதனால்தான் எங்கள் இராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது என்றார்.

பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!