உலகம்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

57views

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்க்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டை விட்டு வெளியேறி போலந்தில் தஞ்சம் புகுந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு, தற்போது தலைநகர் கிவ் மீது பெரிய தாக்குதல் எதுவும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரில், தலைநகர் கீவ் சில நாட்களாக நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், Zelensky நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், இப்போது Kyiv மீது தாக்குதல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ரஷ்ய இராணுவம் உக்ரைனின் தலைநகரைச் சுற்றி மிகப்பெரிய அளவில் முற்றுகை இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூற்றை பிரிட்டிஷ் நாளிதழான ‘தி டைம்ஸ்’ கூறியுள்ளது.

இருப்பினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்பதை, ஜெலென்ஸ்கியோ, உக்ரைன் அரசாங்கமோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டை விட்டு ஓடமாட்டேன் என்று பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் இராணுவமும் தொடர்ந்து ரஷ்யாவுடன் எதிர்த்து சண்டையிட்டு வருகிறது, ஆனால் ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் உக்ரைன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை இராணுவ முகாம்கள் மற்றும் தளங்கள் மீது நடந்துள்ளன, இதில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், உக்ரைனில், கடந்த 9 நாட்களில், ரஷ்யாவின் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!