உலகம்

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதிப்பு

45views

ஒவ்வொரு நாளாக ரஷ்யா மீது உலக நாடுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனை ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதித்துள்ளது. நாளுக்கு நாள் உலக நாடுகள் ரஷ்யா மீது கொடுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஊடகங்களின் கணக்குகளை சமூக வலைதளமான ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. ரஷ்யா மீது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு சிறிது சிறிதாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சர்வதேச ஜூடோ தற்காப்புக்கலை அமைப்பின் கவுரவ தலைவர் பதவி, ரஷ்ய அதிபரிடம் இருந்து இன்று பறிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!