உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.. புடின் உரிய விலை கொடுப்பார்: ஜோ பைடன் ஆக்ரோஷ எச்சரிக்கை

39views

நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன் பாதுகாப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மற்ற இடங்களை தாக்கு வருகிறது ரஷ்யா.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது நேட்டோ நாடுகள்.

1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து வந்தது. அதன்பிறகு ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் உக்ரைனை ஆண்டு வந்தார். 2014க்குப் பிறகு அவர் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து உக்ரைன் தன்னை நேட்டோவில் இணைத்துக்கொள்ள விரும்பியது. அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதுவே இருநாடுகள்ளுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா இருக்கிறது. கடந்த வாரம் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால் ரஷ்யாவின் ராணுவ படைக்கு முன் உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக எந்த நாடும் ராணுவத்தை அனுப்பவில்லை. இதனால் உக்ரைன் தனித்து விடப்படுவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க நிலையை சமாளிக்க பணஉதவி செய்தது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாங்கள் ஐரோப்பாவுடன் இணைய விரும்புகிறோம் என்றார். அதற்கான விண்ணப்பத்தையும் ஐரோப்பா நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கிறார். இதனால் ரஷ்யா கடும் கோபத்தில் இருக்கிறது. நேட்டோ உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் என்று தெரிவித்தது. அப்படி ஆயுதங்கள் வழங்கினால், பெரும் பின்விளைவுகளை நேட்டோ சந்திக்கும் என்று ரஷ்யா எச்சரித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ”அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் ஆதாயம் அடையலாம். ஆனால், அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது” என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!