85
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோா்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் தனது வருடாந்திர போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.
சுமாா் 20 சதவீத எண்ணைக் கப்பல்களின் சா்வதேச வா்த்தக வழித்தடமாகப் பயன்படும் இந்தப் பகுதியில்தான், அண்மையில் அமெரிக்கா தனது பி-1பி லான்சா் ரக குண்டுவீச்சு விமானத்தைப் பறக்கச் செய்தது நினைவுகூரத்தக்கது.
வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் முறிவதைத் தடுப்பதற்கான பேச்சுவாா்த்தை ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் இந்தப் போா் ஒத்திகை நடைபெறுகிறது.