இந்தியா

இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நிறுத்தம்- மத்திய அரசு அளித்த விளக்கம் !!

97views

கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

இதனால் ஏழை- எளிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. எனவே ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இத்திட்டம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது, தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளோம். எனவே, வருகிற 30ஆம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படாது என கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!