இரை தேடும் உலகில் இறை தேடும் அன்பார்ந்த நான் மீடியா அன்பர்களே!
மானால் வந்த ஒரு தலம் பற்றி தெரிந்து கொள்வோம் திருத்தல வரலாறு பகுதியில்.தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன .அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன .
வடகரை மாந்துறை
திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில் காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 58வது தளமாக விளங்குகிறது .
தென்கரை மாந்துறை
கும்பகோணம் சாங் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலம்.
வடமாந்துறை தலவரலாறு
முனிவர் ஒருவர் தான் சிவனுக்கு செய்த தவறால் ,இத்தலத்தில் மான்களாக பிறந்து வந்த ஒரு அசுர தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
ஒரு முறை இரைதேடச் சென்ற மான்கள்,” சிவனை! எங்களுக்கு சாபவிமோசனம் தந்து அருள் பாலிக்க வேண்டும் “என்று வேண்டவே ,சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி அவற்றிற்கு முக்தி அளித்தார்.தாய் தந்தையரை காணாத பிஞ்சு மான் கலங்கி நிற்க .அம்மையப்பனான சிவனும் பார்வதியும்,தாய், தந்தை மான்கள் ஆகி குட்டிமானை ஆற்றுப்படுத்த, அன்னையின் பாலமுது உண்டவுடன் ஞானம் பெற்றது.திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடியை கண்டதாக பொய் உரைத்த பிரம்மன் இத்தலத்தில் தவமியற்றி தனது பாவத்தை போக்கிக் கொண்டதாக கூறுவார்.கோயில் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில்அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞான சம்பந்தர் ,ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். முன்னர் மாந்தோப்பு நிறைந்து காணப்பட்டதால் மா உரை இடம் என கூறப்பட்டு பின்னர் மாந்துறை என மருவியது என்பர்.
தல வரலாற்றின்படி மான்களாக பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்ததால் மான் உறை மாந்துறை ஆகியது என்பதும் உண்டு. .
தல விருட்சம்
மாந்துறை கோவில் தல விருட்சம் மாமரம்.
கல்வெட்டு
இங்கு சோழர் கால கல்வெட்டுகள் இரண்டு படியெடுக்கப் பட்டுள்ளது மாந்துறையின் தொன்மையை பறைசாற்றும்..
ஆம்ரவனேஸ்வரர்
தலத்தில் மூலவர் ஆம்ரவனேஸ்வரர்.
ஆம் என்றால் வடமொழியில் மாங்காயை குறிக்கும்..மிருகண்டு முனிவர் இந்த தலத்தில் வந்து வழிபாடு செய்ததால் மிருகண்டீஸ்வரர் என்று பெயரும் உண்டு.அம்பாள் பெயர் வாலாம்பாள்.சூரியன் ,சந்திரன் ,இந்திரன் ஆகியோர் வந்து வழிபாடு செய்ததாக நம்பிக்கை நிலவுகிறது.,.லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ,அவர்களின் வழிவந்து உலகமெங்கும் பரந்து வாழும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.மாந்துறையான் என்ற பெயரும் உண்டுஅமைவிடம் திருச்சி லால்குடி பேருந்து தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் திருச்சி லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றிலிருந்து பேருந்து மூலம் செல்ல வசதி உள்ளது .இந்த சிற்றூர் .ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான தொன்மை வாய்ந்த கோவில். அவனருளால் அவன் தாள் வணங்கி
ஜோதிட ரத்னாகரம்
காலக்கணிதன் செ.பாலசந்தர்
B.Com,M.A.M.A,M.A.,M.Phil.,M.Sc.,P.G.D.C.A.,D.A.,
மண்ணச்ச நல்லூர்