தமிழகம்

இரவு நேர ஊரடங்கால் ஒரு பயனும் இல்லை – சொல்கிறார் பிரபல மருத்துவ நிபுணர்!!

64views

ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்து வரும் நிலையில், அதனால் எந்த பயனும் இல்லை என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார் .

இந்தியாவில் கொரோனாவின் ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருவதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது . மேலும் ஒன்றிய அரசு சார்பில் மாநில அரசுகளே தொற்று பரவலின் அடிப்படையில் உள்ளூரில் கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொள்ளலாம் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் , தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் இரவு நேர ஊரடங்கு எந்த பலனையும் அளிக்காது எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை . முறையான தரமான 3 அடுக்குள்ள முகக்கவசங்களை அணியுங்கள் அல்லது சர்ஜிக்கல் முகக் கவசங்களை அணியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவெளியில் கூட்டம் கூடுவதோ, கூட்டங்களிலோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளுங்கள். ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் தவறாமல் போட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!