விளையாட்டு

இரண்டு முக்கியமான வீரர்கள் நீக்கம் ; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான்

55views

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், சேப்மன் 63 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 48 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் ஈசியாக கிடைக்க வேண்டிய வெற்றிக்கு கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி, ஒருவழியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. புகழ்பெற்ற கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் சொதப்பியிருந்தாலும், அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அதேவேளையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பந்துவீசாத அக்‌ஷர் பட்டேல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கடந்த போட்டியின் காயமடைந்த முகமது சிராஜ் அடுத்த போட்டியில் விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல்/முகமது சிராஜ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!