சினிமா

இப்படி நடக்கும்னு நடிக்கும் போது தெரியாது – முருங்கைக்காய் சிப்ஸ் குறித்து பேசிய அதுல்யா

54views

முருங்கைக்காய் புகழ் இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் தான் ஜோடி கட்டி நடித்த முருங்கைகாய் சிப்ஸ் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என தான் துளியும் நினைக்கவில்லை எனக் கூறுகிறார் அதுல்யா ரவி.

சாந்தனு, அதுல்யா ரவி நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படம் இன்று தான் திரைக்கு வந்துள்ளது. இதில் இயக்குநரும், சாந்தனுவின் தந்தையுமான கே.பாக்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, யோகிபாபு, முனிஸ்காந்த், மனோபாலா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். மேலும் தரண் குமார் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ளன. ரமேஷ் சக்கரவர்த்தி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்று திரைக்கு வந்துள்ள இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் படத்தோட கதை என்னவோ முருங்கைக்காய் சமாச்சார கதை தான் போங்க. அட ஆமாங்க முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் தான் முருங்கைக்காய்க்கும் முதலிரவுக்கும் முடிச்சுப் போட்டார். அதே முடிச்சு இங்கு முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நீண்டுள்ளது. படம் முதலிரவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

சாந்தனு, அதுல்யா ரவி புதுமனத் தம்பதி. சாந்தனுவில் தாத்தா கே.பாக்யராஜ். (அட படத்தில் சொல்றோம்) சாந்தனுவுக்கும் அதுல்யா ரவிக்கும் திருமணம் நடந்தது சரி முதலிரவு நடந்ததா என்பது தான் படத்தின் ஒன்லைன். படம் முழுக்க அவர்களின் முதலிரவுக்கும் வரும் முட்டுக்கட்டைகள் பற்றி சுழல்கிறது. அப்புறம் ஏ சான்றிதழ் கொடுக்காமல் எல்கேஜி சான்றிதழா கொடுப்பார்கள் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கும் கேட்கிறது.

ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியுள்ளார் அதுல்யா ரவி. படத்தில் நடிக்கும்போது இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் கொடுக்கும் என்று அவுங்க கொஞ்சம் கூட எதிர்பார்கவே இல்லையாம்.

அப்புறம் ஏன் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அட அடிக்கடி படத்தில் இரட்டை ஆர்த்த வசனம் வருதுங்கோ எனக் கூறுகின்றனர். முதலிரவு தான் கதையம்சம் என்றால் இரட்டை, மூன்று, நான்கு அர்த்தமெல்லாம் வரத்தானங்க செய்யும் என்கிறது படக்குழு.

ஆனால், இது நம்ம ஹீரோயின் அதுல்யா ரவிக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை . அதனால் தான் தெளிவா சொல்லியிருக்காங்க படத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும்னு தோணவில்லை என்று. அவுங்களுக்கு மொழி புரிந்திருக்கலாம் இரட்டை அர்த்த மொழி புரிந்திருக்க வாய்ப்பில்லை தானுங்க. நம்புவோமாக. ஆனால் படத்திற்கு தேவையான காட்சிகளை தான் மனதில் கொண்டு நடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!