தமிழகம்

இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்

42views

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,பொங்கல் பண்டிகை என்பதால்,கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.இதற்கிடையில்,15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,இவர்களும் இனி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.எனவே,அருகில் உள்ள தடுப்பூசி முகாம் மையங்களுக்கு சென்று தங்களுக்குரிய முதல் தவணை அல்லது இரண்டாவது தவணையை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.இந்த முகாமில்,முன்களப் பணியாளர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!