உலகம்

இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.. ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை வழங்க முடிவு

41views

இந்தியா- ரஷ்யா இடையே நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்றைய தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். ராணுவம், வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் அந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது இன்றைய தினம் அந்த மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை செர்கே ஷாய்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் மற்று்ம ரஷ்ய வெளியுறவுத் துறை செர்கே லவ்ரோவ் உள்ளிட்ட கலந்து கொள்கிறார்கள். உலகில் கொரோனாவால் 26.61 கோடி பேர் பாதிப்பு – பிரிட்டனில் ஒரு நாள் கேஸ்கள் அதிகம் இந்த மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வருகை தருகிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார். அப்போது இந்தியா- ரஷ்யா இடையே வணிகம், ராணுவம், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.

இரு நாடுகளிடையே ராணுவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2021- 2031 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்படுகிறது. அத்துடன் ஏகே 203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 5100 கோடி ஒதுக்கீடு செய்ய பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியில் ஏகே 203 துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஆலை தொடங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மாநாட்டின் போது இரு தரப்பு நல்லுறவு, வெளிநாட்டு பிரச்சினைகள், எல்லை பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!