நிகழ்வு

இனிய நந்தவனத்தின் கால் நூற்றாண்டு வெற்றிப் பயணம்

157views
கொரோனா நெருக்கடியான காலத்திலும் நெகிழ்வாக நடந்தது இனிய நந்தவனம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
தமிழ்நாட்டில், திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையில் வெள்ளி விழா 10/01/2022 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஹோட்டல் செவனாவில் சிறப்பாக நடைபெற்றது
விஜிபி நிறுவனங்களின் திருச்சிக்கிளைத்தலைவர் இரா.தங்கையா தலைமையில் நடைபெற்றி நிகழ்வுக்கு இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்து இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர் இனிய நந்தவனம் பதிப்பக நூல்களின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வெற்றித் தமிழன் விருது, நம்பிக்கை நாயகன் விருது, இதழியல் மாமணி விருது போன்ற விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்
அரிமா டாக்டர் அச்சர் சிங், அபூபக்கர் சித்திக், கவிஞர் முருகபாரதி, அறம் கிருஷ்ணன், முனைவர் ரோகிணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்க முனைவர் கலையமுதன் சிறப்புரை வழங்கினார் புலவர் தியாக சாந்தன் வாழ்த்துகவிதை வழங்கினார்
இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர், நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய “இளவேனிற் காலத்து உரையாடல்” “சுகமாய் ஒரு ஞானம்” பா.தென்றலின் “வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும் “போன்ற நூல்கள் வெளியிடப்பட்டது
சிங்கம்பட்டி பெ.மாடசாமி, இராம்குமார் சிங்காரம், எம்.கே.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நம்பிக்கை நாயகன் விருதும் உ.ரமேஷ் சிங்கபபூர், சுப்பிரமணியன் காந்தி அமெரிக்கா, ஞானப்பிரகாச சுவாமிகள் ராணிப்பேட்டை, முனைவர் ப.. குரு சந்தர் சேலம், அறம் கிருஷ்ணன் ஓசூர், வேலு சிவனேசன் ஜெர்மனி, ஆர்.பி.நாராயணன் சேலம், ரா.கிருஷ்ணன் சேலம்,. ஆகியோருக்கு வெற்றித் தமிழன் விருதும் கோமதிசங்கரன் மலேசிய, சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூர், முனைவர் ரோகிணி துபாய் ஆகியோருக்கு வெற்றித் தமிழினி விருதும் வழங்கப்பட்டது
பத்திரிகையாளர்கள் சு.சாதாசிவம், கவிஞர் சொர்ணபாரதி, கரூர் குரல் சதீஸ் ஆகியோருக்கு இதழியல் மாமணி விருது வழங்கப்பட்டது, நந்தவனம் சந்திரசேகரனின் 25 ஆண்டுகால இலக்கியப் பணியைப் பாராட்டி ஜெர்மனி எசன் தமிழர் கலாசார நற்பணி மன்றம், நுண்கலை நிறுவனம், தமிழருவி வானொலி போன்ற அமைப்புகள் இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது நிகழ்வின் முன்னதாக சக்தி யோகாலயா மாணவர்களின் யோகாக்கலை நிகழ்ச்சி நடைபெற்றது நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க கலாநிதி வே.த.யோகநாதன் அவருக்கு நன்றி தெரிவித்தார்
கவிஞர் பாதென்றல், முனைவர் இளவரசி முருகவேல் ஆகியோர் சிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!