சினிமா

இந்த மாதிரி கதையை தொடக்கூட மாட்டேன்.. ஆவேசமாக பேசிய பா ரஞ்சித்

57views

தமிழில் அட்டக்கத்தி என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித். இந்த படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களை இயக்கி திரையுலகில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து தற்போது ரஞ்சித், சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் என்ற படத்தை தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பிராங்கிளின் ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படக்குழு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

அதில் பேசிய ரஞ்சித், நான் சினிமா இயக்குவதற்காக மட்டும் தான் வந்தேன். எனக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அது ஏன் இன்னும் பேசப்பட வில்லை என்ற நோக்கத்தில் மட்டும்தான் நான் இருக்கிறேன். இங்கு நான் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். பல கட்டுப்பாடுகளை உடைப்பது பற்றி நான் யோசித்தது கிடையாது.

நாவல்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் எல்லாம் பார்க்கும்போது இதைப் போல் நம்மால் ஏன் பேச முடியவில்லை என்று தோன்றும். அதற்கு நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். எனக்கு முன்னால் சென்றவர்கள் அதற்கான பாதையை கொடுத்திருந்தால் நான் எளிதாக பயணித்து இருப்பேன்.

என் முதல் படத்தின் போது எனக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. அது போன்ற ஒரு கஷ்டத்தை நான் தயாரிக்கும் பட இயக்குனருக்கு தரக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

மேலும் கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருப்பேன், எனக்கு பிடிக்காத கதையோ அல்லது எதிரான கதையோ என் தயாரிப்பில் இருந்து வெளியாகக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் ரைட்டர் படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுதவிர மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரி ஒரு அற்புதமான நடிகர். அதற்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. என் படத்தில் பணிபுரிபவர்களுக்கு பல சிக்கல் உருவானது. ரஞ்சித் படத்தில் பணிபுரிபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நிறைய இடத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு உள்ளது.

அதை இல்லை என்று சொல்ல முடியாது அது அப்பட்டமான உண்மை தான். அதில் ரொம்ப பாதிக்கப்பட்டவர் என்று பார்த்தால் அது ஹரிதான். அவர் வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த நடிகர். ரைட்டர் படத்தில் அவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ரஞ்சித் பேசியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!