இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பாதி பேர் குள்ளர்கள்..! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது..
இந்த உலகில் பல விசித்திரமான இடங்களும், வித்தியாசமான மனிதர்களும் இருக்கின்றனர்.. அந்த வகையில் குள்ளர்களை பற்றி நாம் கதைகளிலோ படித்திருப்போம்..
நிறைய படங்களில் கூட பார்த்திருப்போம்.. ஆனால் ஒரு கிராமத்தில் 50% பேர் குள்ளர்களாக இருக்கின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறது.. ஆம்.. உண்மை தான்.. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள கிராமத்தில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் குள்ளர்களாக உள்ளனர்..
அதாவது, அந்த கிராமத்தில் வசிக்கும் 80 பேரில் 40 பேர் குள்ளர்கள் என்று கூறப்படுகிறது.. அங்கு வசிக்கும் மக்கள், தேசிய உயரத்தை விட குறைவாக இருப்பதால் குழப்பமடைந்த விஞ்ஞானிகள், இதற்கு என்ன காரணம் என்று ஆராய தொடங்கினர்.. ஆனால் அவர்களால் அந்த காரணத்தையும் கண்டறிய முடியவில்லை.
கிராமத்தில் உள்ள உயரமான மனிதர் சுமார் 3 அடி 10 அங்குல உயரம் இருப்பதாகவும், குட்டையான நபர் 2 அடி 1 அங்குலம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு சராசரி மனிதனுக்கும் யாங்சியில் வசிப்பவர்களுக்கும் இடையே உள்ள அசாதாரண வேறுபாட்டின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்ள, விஞ்ஞானிகள் அப்பகுதியின் நீர், அவர்களின் உணவு மற்றும் மண் போன்றவற்றை சோதிப்பது வரை என பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர்.. ஆனால் அவர்களால் எந்த காரணத்தையும் கண்டறிய முடியவில்லை.
கோடை காலத்தில் அந்த கிராமத்தில் 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஒரு மர்மமான நோய் பரவுகிறது என்று கிராமத்தின் முதியவர் கூறுகிறார்.. அந்த குழந்தைகள் மட்டுமே வளர்வதை நிறுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். தவிர, மேலும் சிலர் பல்வேறு உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நபர் கூறினார்.
கிராமத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பல்வேறு அசாதாரண விளக்கங்கள் மற்றும் கதைகளை பலர் கூறுகின்றனர்.. கிராமத்தின் மண்ணில் அதிக அளவில் பாதரச செறிவு இருப்பதால், மக்கள் வளரவில்லை இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த கோட்பாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
இதற்கிடையில், ஜப்பான் சீனாவை நோக்கி வெளியிட்ட விஷ வாயுவின் தாக்கத்தால், இந்த நிகழ்வு கிராமத்தில் பரவியதாகவும் சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றுவரை, இந்த மர்மத்திற்கு யாராலும் சரியான பதிலை கொடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் யாங்சி கிராமம் இருப்பதை சீன அரசாங்கம் ஒருபோதும் மறுத்ததில்லை.. ஆனால் வெளிநாட்டவர்கள் யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.