Villagers stand outside a building in Maumere in East Nusa Tenggara on Flores island on December 14, 2021, after a 7.3-magnitude earthquake struck off the coast in eastern Indonesia. (Photo by YANUARIUS ARLINO WELIANTO / AFP)
உலகம்

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்

47views

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் சில மணி நேரங்களுக்கு பின் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மொவ்மேர் நகரத்தில் இருந்து 100கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 18.5 கிமீ ஆழத்தில் ப்ளோரஸ் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மொவ்மேர் நகரத்தின் மைய பகுதியில் இருந்து 1000 கிமீ தூரம் வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டளது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுனாமி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், குறைவான அளவிலேயே சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் சில மணி நேரங்களுக்கு பின் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் இந்தோனேசியா அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். காரணம் என்ன? இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2004ல் இந்தோனேசியாவில் 9.1 அளவில் சுமந்திரா கடல் பகுதி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. பலி இதில் 220,000 பேர் மரணம் அடைந்தனர். அதில் 170,000 பேர் இந்தோனேசிய குடிமகன்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது .

அதேபோல் 2018ல் இந்தோனேசியாவில் இருக்கும் லாம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 550 பேர் வரை பலியானார்கள். இந்த நிலநடுக்கம் ஒரு வாரம் விட்டு விட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் கடந்த இந்தோனேசியாவின் பலு தீவில் இதேபோல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 4300 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!