விளையாட்டு

இந்திய வீரர்கள் ரோபோக்கள் அல்ல: கெவின் பீட்டர்சன் ஆதரவு

72views

டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி என்ற ஹோதாவில் ஆடிய இந்திய அணி முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோற்று அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.

இந்த இரண்டு தோல்விகளை அடுத்து கடும் விமர்சனங்களை இந்திய அணி சந்தித்து வருகிறது. சுனில் கவாஸ்கர் கூறும்போது, “பேட்டிங் ஆர்ட்ரில் செய்த மாற்றம் கை கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக தொடக்கத்தில் இறங்கி வரும் ரோகித் சர்மாவை 3ம் நிலையில் இறக்கினால் அது அவரது தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயலாகும்.

ட்ரெண்ட் போல்ட் பந்தை உங்களால் எதிர்கொள்ள முடியாது என்று ரோகித்திடம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இஷான் கிஷனை தேவைக்கேற்ப 4, 5ம் இடங்களில் இறக்கலாம். ஆனால் முக்கிய வீரர்களான ரோகித், பிறகு கோலி டவுன் ஆர்டரை மாற்றியது சரியல்ல” என்று சாடினார்.

கபில் தேவ் கூறும்போது, “போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் உத்வேகத்தைத்தான் கோலியிடம் பார்த்திருக்கிறோம் ஆனால் அவர் நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை என்று கூறியிருப்பது பலவீனமான மனநிலையைக் காட்டுகிறது, இந்திய வீரர்களின் முகங்களைப் பார்க்கும் போது இவர்கள் தேறுவது கடினம் என்றே தெரிகிறது. ரவிசாஸ்திரியும் தோனியும் சேர்ந்து வீரர்களை உற்சாக வழிக்குத் திருப்ப வேண்டும். ” என்றார்.

ஆனால் இந்த விமர்சனங்களெல்லாம் ஒரு புறம் இருக்க இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்திய அணிக்கு ஆதரவு தருமாறு: ஆட்டத்தில் ஒருவர் ஜெயித்தால் ஒருவர் தோற்றுத்தான் ஆகவேண்டும், யாரும் தோற்க வேண்டும் என்று களம் புக மாட்டார்கள். விளையாட்டு வீரர்கள் ரோபோக்கள் அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும், என்று ட்வீட் செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கும், “நாம் நம் வீரர்கள் மீது கடுமை காட்ட வேண்டாம். அவர்கள் சிறப்பாக ஆடியதை நாம் பார்த்திருக்கிறோம். தோல்விக்குப் பிறகே யாருக்கும் காயம் ஏற்படவே செய்யும். ஆனால் வெல்டன் நியூசிலாந்து, அனைத்து துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டீர்கள்” என்று பாராட்டியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!