விளையாட்டு

இந்திய பெண்கள் அணி தோல்வி நட்பு கால்பந்தில் ஏமாற்றம்

77views

நட்பு கால்பந்தில் இந்திய பெண்கள் அணி 0-1 என டுனிசியாவிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில், அடுத்த ஆண்டு (ஜன. 20 – பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் எமிரேட்ஸ் சென்ற இந்திய பெண்கள் அணி, இரு நட்பு போட்டிகளில் பங்கேற்றது. எமிரேட்சிற்கு எதிராக 4-1 என வென்ற இந்தியா, டுனிசியாவை சந்தித்தது.

போட்டியின் 8வது நிமிடத்தில் டுனிசியாவுக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய ஹியுஸ், கோலாக மாற்ற இந்தியா 0-1 என பின்தங்கியது. 11, 31, 40 வது நிமிடம் என இந்தியாவுக்கு அடுத்தடுத்து ‘பிரீ கிக்’ வாய்ப்புகள் வந்த போதும் மணிஷா, தலிமா என இருவரும் பந்தை வெளியே அடித்து வீணடித்தனர்.

63 வது நிமிடம் டுனிசியா அணியினர் அடித்த பந்தை இந்திய வீராங்கனையினர் எளிதாக தடுத்தனர். 68 வது நிமிடம் இந்துமதிக்கு மாற்றாக களமிறங்கிய சந்தியாவும் ஏமாற்றினார். முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. அடுத்து பக்ரைன் செல்லும் இந்திய அணி, பக்ரைன் (அக். 10), சீனதைபே (அக். 13) அணிகளுடன் நட்பு போட்டியில் விளையாட உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!