விளையாட்டு

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டிகளின் மைதானங்கள் மாற்றம்- பிசிசிஐ அறிவிப்பு

53views

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் போட்டித்தொடரையும் இழந்துள்ளது.

இதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரை முடித்து தாயகம் திரும்பும் இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதுகாப்பு நடவடிக்கையாக, முதலில் அறிவிக்கப்பட்டபடி தொடரை ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அதாவது, மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் நடைபெறும். அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!