விளையாட்டு

இந்தியா மூத்த சகோதரர் – இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

49views

இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரர் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்வதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இந்தியா மூத்த சகோதரர் – இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் அனைத்து விண்ணை முட்டும் அளவு இருக்கிறது. அதுமட்டுமின்றி நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி நேரம்வரை மின்வெட்டும் ஏற்படுகிறது.

இதனையடுத்து மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் ராஜபக்‌ஷே உள்ளிட்டோர்தான் காரணம். எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ராஜபக்‌ஷே கட்சிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் 103 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதால்  ராஜபக்‌ஷேவின் கட்சி பெரும்பான்மையை இழந்தது.

ஆனாலும், பதவி விலகுவதில்லை என்பதில் அதிபரும், பிரதமரும் பிடிவாதமாக இருக்கிறனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி அரசியல் நெருக்கடியும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கைக்கு இதுவரை இரண்டு லட்சத்து 70,000 மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா வழங்கி உதவி செய்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அண்டை நாடான இந்தியா மூத்த சகோதரர் ஸ்தானத்தில் எங்களுக்கு எப்போதுமே உதவிவருகிறது.

இந்த சூழலை நாங்கள் தாக்குப்பிடிப்பது கடினம். இந்தியாவின் உதவியால் இதிலிருந்து நாங்கள் மீள்வோம். இலங்கையில் வாழ முடியாத சூழல் இருப்பதால்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தற்போதைய இலங்கையின் நிலைமைக்கு அரசுதான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வன்முறையின்றி மக்கள் போராட வேண்டும்” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!