விளையாட்டு

இந்தியாவுடன் டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

49views

இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் நடக்கும் ஒருநாள் போட்டித் தொடரின் 3 ஆட்டங்களும் அகமதாபாத்தில் (பிப். 6, 9, 11) நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து, 3 டி20 போட்டிகளும் கொல்கத்தாவில் நடைபெறும் (பிப். 16, 18, 20).

ஒருநாள் போட்டிகளுக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 தொடருக்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடி வரும் அதே வீரர்களே இந்திய சுற்றுப்பயணத்துக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போலார்டு தலைமையிலான அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வெ.இண்டீஸ் டி20 அணி: கெய்ரன் போலார்டு (கேப்டன்), நிகோலஸ் பூரன் (துணை கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், பிராண்டன் கிங், ரோவ்மன் பாவெல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!