இந்தியாசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி… 41,000 பேர் மீண்டனர் – 624 பேர் மரணம்

65views

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 41,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று 624 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. முதல் இரண்டு அலைகளில் 19 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் முதல் அலையில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் இரண்டாவது அலை சுனாமியாக வீசி சுருட்டிப்போட்டு விட்டது. தினசரியும் ஆயிரக்கணக்கான மரணங்கள் பதிவானதால் சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாமல் மக்கள் தவித்து போயினர். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,09,46,074 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,000 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,04,720 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 97.28 % ஆக அதிகரித்துள்ளது.

53ஆவது நாளாக மாநிலத்தில் குறையும் கொரோனா.. ஆனால் இந்த ‘ஒரு’ மாவட்டத்தில் மட்டும் நிலைமை மோசம்தான்

நாடு முழுவதும் ஒரே நாளில் 624 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,11,408 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 4,29,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் 38,76,97,935 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரே நாளில் 37,14,441 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி வரைக்கும் 43,59,73,639 சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. 19,15,501 சாம்பிள்கள் ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!