இலங்கையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இந்தியாவிடமிருந்து தகவல் கிடைத்ததன் பின்னர்,புலனாய்வுத்துறையினர் என்ன செய்தார்கள் என்பது குறித்து தனக்கும் அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe)தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் புலனாய்வுத் துறை வலுவிழந்திருந்ததை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர், குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளே இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக முக்கிய பங்கை வகித்தார்கள் என கூறிய அவர், புலனாய்வு பிரிவு அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.
புலனாய்வுத்துறை வலுவிழந்தமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வலுவிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.