இந்தியா

இந்தியர்கள் நாடு திரும்பும் செலவை மத்திய அரசு ஏற்கிறது

66views

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கீவ் நோக்கி சென்றது.

ஆனால் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியதால் அந்த விமானம் பாதி வழியில் திரும்ப நேரிட்டது.

இதையடுத்து உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுகுறித்து ஹங்கேரி, ஸ்லாவேகியா வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார். இரு நாடுகளும் மீட்புப் பணிக்கு சம்மதம் தெரிவித்தன. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சென்றடைய வேண்டும். பிறகு அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என் பதே தற்போதைய திட்டமாகும்.

இதனிடையே ருமேனியா வந்துசேர்ந்த இந்தியர்களுடன் ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் அங்கிருந்து இன்று புறப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மீட்புப் பணிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கும் என்றும் அவர்கள் கூறினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!