இந்தியா

இணையதளம், யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

50views

நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக எச்சரித்துள்ளது.

காலப்போக்கில் நாள்தோறும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சிலவை எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் அவர்களுக்கு தோன்றியவற்றை வெளியிடுகின்றன. இதனால் பதற்றமான சூழல் உருவாகுதல், அவதூறு, பொய்யான தகவல்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

இதற்கு தீர்வுகாண நீண்டகாலமாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 19 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!