உலகம்

இங்கிலாந்தில் உச்சம் தொட்ட கொரோனா – ஒரே நாளில் 1.22 லட்சம் பேருக்கு பாதிப்பு

39views

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியானது.

இதற்கிடையே, 5 முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்றும் இங்கிலாந்தில் 1,22,186 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் 137 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99.61 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 17.82 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!