736
தேவையான பொருட்கள்
- தோல் சீவிய கேரட் – 1
- உதிர்த்த மாதுளை – 2 பழம்
- தோல் சீவிய ஆப்பிள் – ½ பழம்
- நட்ஸ் பொடி (முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் பொடித்தது) – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம். - தேவைப்பட்டால் தேன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம்.
பலன்கள்
- சருமத்துக்கு மிகவும் நல்லது.
- விட்டமின் சி கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- பார்வைத் திறன் மேம்படும்.
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.
- முதியவர்களுக்கும் நன்மையைத் தரும்.
- எனர்ஜி கிடைக்கும்.
- உடலில் ரத்தம் உற்பத்தியாகும்.
- ரத்தசோகை நீங்கும்.
ஆரோக்கியமான கேரட் ,மாதுளை ,ஆப்பிள் ஜூஸ் தயார்..