உலகளவில் கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க மனித கொலைகள் மற்றும் இயற்கை அழிவுகளாலும் மரிணிக்கும் சம்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் பலியாகினர்.
பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாதுகாப்பு படை வரும் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அந்த கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிராம மக்கள் பலர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.