இந்தியா

ஆந்திர அமைச்சரவை மாற்றம்: நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு

136views

ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார்.

பட்ஜெட் உரைக்கு பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், இந்த பட்ஜெட்டால். அனைத்து தரப்பினரும் வளம் பெறுவர். விரைவில் அமைச் சரவை விஸ்தரிப்பு இருக்கும். இதில், அமைச்சர் பதவிகள் பறி போனால், அவர்கள் வருத்தப்பட கூடாது. அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஜெகன் மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும், அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் மாவட்டங் களும் 13 லிருந்து 26 ஆக பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அதன்படி, சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்ப் பார்க்கப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!